ஏறத்தாள மூன்றரை தசாப்த காலத்திற்கு மேலாக நடாத்தப்படுகின்ற மேற்படி பாடநெறியானது இலங்கையின் விளையாட்டுக் கல்வித் துறையில் மாபெரும் அங்கீகாரம் உடையதாகக் காணப்படுகின்றது. மேற்படி பாடநெறியினைப் பயின்ற எமது முன்னால் மாணவர்கள் விளையாட்டு உத்தயோகத்தர்களாகவும், அரசாங்க மற்றும் தனியார்துறைகளில் உடலியற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்களாகவும் நாடு முழுவதும் சேவைகளில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத் துறைசார்ந்த வெற்றிடங்ளை நிரப்புதல் மற்றும் பதவி உயர்வுகளை வழங்குதல் போன்றவற்றின்போது மேற்படி
டிப்ளோமாவனது பூர்த்திசெய்யப்பட்டிருத்தல் தேவைப்பாடாக அமைகின்றது. எழுத்துமூலப் பரீட்சையின் பின்னர் செயன்முறைப் பரீட்சை ஒன்று நடாத்தப்பட்டு போட்டி முறையில் தேர்வு மேற்கொள்ளும் முறையினை அடிப்படையாகக் கொண்டு பாடநெறியினைப் பயில்வதற்கு விண்ணப்பதாரிகளிலிருந்து தகைமை கொண்டோர் தெரிவு செய்யப்படுவர். வருடாந்தம் அரசாங்க வர்த்தமானி வாயிலாக வெளியிடப்படும் அறிவித்தலின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்படும்.
காலப்பகுதி : 12 மாதங்கள் (முழு நேரம்)
பாட உள்ளடக்கம் :
i.  பயிற்றுவித்தலின் பொதுக் கோட்பாடுகள் - பயிற்றுவித்தற் கோட்பாடுகள். சக்தித் தொகுதிகள், பயிற்றுவித்தல் முறைமையியல், உகந்த பயிற்சிச் சுமை, உடற்றகைமை, பயிற்சித் திட்டமிடல்.
ii. கட்டாய விளையாட்டுக்கள், வொலிபோல், வலைப்பந்தாட்டம், உதைப்பந்தாட்டம், ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்தாட்டம், கபடி, நீச்சல், கிரிக்கட், பாரந்தூக்கல், ஜூடோ, பூப்பந்தாட்டம் ஆகியன.
iii தெரிவு விளையாட்டுக்கள் - ஹொக்கி, டைக்கொண்டோ, கராத்தே, மல்யுத்தம்.
iv மெய்வல்லுனர் விளையாட்டுக்கள் - குறு, மத்திம மற்றும் நீண்ட தூர ஓட்டங்கள்,
சுவட்டு மற்றும் மைதான விதிமுறைகளும் சட்டதிட்டங்களும், எறிதல் மற்றும் பாய்தல் நிகழ்ச்சிகள்.
v. சிறப்புப் புலமையினைப் பெற்றுக் கொள்ளவேண்டிய விளையாட்டுக்கள்
- வொலிபோல்/ வலைப்பந்தாட்டம் / உதைப்பந்தாட்டம்.
vi. மேலதிக பாடங்கள் - உடற்பயிற்சி உடற்றொழிலியல், சமூகவியல், உளவியல், புள்ளிவிபரவியல், போசணையியல், உயிரி இரசாயனவியல், உயிரி இரசாயனவியல், விளையாட்டு உயிர்ப்பொறியியல்.& விண்ணப்ப்ப் படிவங்ளை
02. பயிற்றுவிஜப்பாளர் உயர் டிப்ளோமா பாடநெறி (மெய்வல்லுநர் விளையாட்டுக்கள் /வொலிபோல் / உதைப்பந்தாட்டம் / வலைப்பந்தாட்டம்)
மேற்குறிப்பிட்ட பாடநெறிகள் பயிற்றுவிப்பாளர்களுக்கு தமக்கு ஏற்புடைய விளையாட்டுக்கள் தொடர்பாக ஆழந்த அறிவினை வழங்குவதற்காக வடிமைக்கப்பட்டுள்ளது. இது மூன்று மாத கால கற்கைக் காலத்தினையும் அதனைத் தொடர்ந்து மூன்று மாத வெளிக்கள நடவடிக்கைளையும் கொண்டதாக்க காணப்படும்.
இப் பாடநெறியானது விளையாட்டுத்துறை சார்ந்த முகாமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஏற்புடைய அறிவினையும் திறன்களையும் வழங்குதலானது மேற்படி பாடநெறியில் இடம்பெறுகின்றது.. மேற்படி பாடநெறியானது மூன்று கட்டங்களைக் கொண்டு நடாதப்படுவதுடன் ஒவ்வொரு கட்டமும் மூன்று மாத கற்கைச்செய்யற்பாடுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.
04. விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் தொடர்பான குறுகிய கால பாடநெறிகள் (வொலிபோல் / உதைப்பந்தாட்டம், / வலைப்பந்தாட்டம்)
விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களின் தற்போதைய அறிவினை இற்றைப்படுத்துதலானது இப் பாடநெறியின் வாயிலாக இடம்பெறுவதுடன் அவ் விளையாட்டுக்களின் புதிய போக்குகளை விளங்கிக் கொள்ளுவதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது