தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம் ஆனது இலங்கையில் விளையாட்டுக் கல்வித்துறை தொடர்பான முன்னோடி நிறுவனமாகும். 1973 ஆம் ஆண்டு 25 ஆவது இலக்க விளையாட்டுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் " விளையாட்டுப் பாடசலை " எனும் பெயருடன் தாபிக்கப்பட்டதுடன் 1978 ஆம் ஆண்டு பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் தனது கடமைகளை ஆரம்பித்தது. மேலும் 1996 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பாராளுமன்ற சட்டமூலம் ஒன்றின் ஏற்பாடுகளின் பிரகாரம் ஆரம்பச் சட்டமூலமானது திருத்தி அமைக்கப்பட்டு இந் நிறுவனம் "தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம்" என பெயரிடப்படலாயிற்று. மேற்படி நிறுவனமானது 1992 ஆம் ஆண்டிலிருந்து விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்துடன் இணைந்த நிறுவனமாக தொழிற்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனமானது 2006 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து விளையாட்டு அமைச்சின் கீழ் சுயாதீனமான ஓர் நிறுவனமாக இயங்கி வருகின்றது. இந் நிறுவனத்தின் வாயிலாக விளையாட்டு அமைச்சு, மாகாணங்களின் விளையாட்டு அமைச்சுக்கள், கல்வி அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், முப்படைகளின் வீர்ர்கள், பொலிஸ் திணைக்களம் போன்ற அரசு துறைசார்ந்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் விளையாட்டுத் துறைசார்ந்த கல்வியினைப் பெற்றுக் கொள்ளுகின்றனர். இந் நிறுவனத்தின் பிரதான கல்வி நடவடிக்கைகளாக விளையாட்டு விஞ்ஞான டிப்ளோமா (ஒரு வருடம்), விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கான உயர் டிப்ளோமா பாடநெறி (6 மாதம்), விளையாட்டு முகாமைத்துவம் பற்றியதான சான்றிதழ் பாடநெறிகள் மற்றும் குறுகிய கால பயிற்றுவித்தற் பாடநெறிகள் காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக விளையாட்டுத் துறைத் தொடர்பாக நிலவும் கேள்விகள் மற்றும் தேவைப்பாடுகள் என்பனவற்றிற்கு ஏற்புடைத்த விதமான தயாரிக்கப்பட்ட உடற்றகவுநிலை பாடநெறிகள், பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகள் மற்றும் விரிவுரைகள் என்பன இந் நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்றன. தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனமானது உள்ளூர் அல்லது வெளிநாட்டுப் பலகலைக்கழகம் ஒன்றுடன் இணைந்து எதிர்வரும் காலத்தில் முழுமையான பட்டத்தினை வழங்க்கக் கூடிய நிறுவனமாக ஆக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.