English | සිංහල

MINISTRY OF YOUTH AND SPORTS

"National Institute of Sports Science is the most leading government academy of sports education in Sri Lanka"

  • முகப்பு
  • எம்மைப் பற்றி
    • எமது சுயவிபரங்கள்
    • CSR
  • பயிற்சி நிகழ்ச்சி நிரல்
    • திகதியிடப்பட்ட நிகழ்ச்சித்திட்டம்
    • வேண்டுகோளின் அடிப்படையில் இடம்பெறும்
  • எமது வளங்கள்
    • மேல்நோக்குகை
    • நூலகம்
    • மாநாட்டு மண்டபம்/விரிவுரை மண்டபம்
    • உடல் பயிற்சி பிரிவு
    • ஏரோபிக் வகுப்புகள்
  • பரீட்சைப் பெறுபேறுகள்
  • சாதனைகள்
    • கலையரங்கு
    • சர்வதேச சாதனைகள்
    • இலங்கை பதக்க சாதனையாளர்கள்
  • கலையரங்கு
    • புகைப்பட காட்சியகம்
    • காணொளிக் காட்சியகம்
  • தொடர்பு

எம்மைப் பற்றி

CSR
 
உடற்தகவுநிலை ​ஆலோசனை அலகு - இலவசமாக முழுக்கால பரிசோனை பெற்றுக் கொடுக்கப்படும்.

தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் சேவைகளை வியாபிக்கும் நோக்கில் விளையாட்டு அமைச்சர் கௌரவ. மகிந்தாநந்த அழுத்கமகே அவர்களால் 2013 ஜலை 08 ஆம் தினத்தன்று, உடற்தகவுநிலை ​ஆலோசனை அலகு  திறந்து வைக்கப்பட்டது. இவ் அலகின் வாயிலாக பொதுமக்கள் தமது உடலில் பேணப்பட வேண்டிய நீர் மற்றும் தசைச் சதவீதம், உடற்திணிவுச் சுட்டிப் பெறுமானம் (BMI), உயரத்திற்கு ஏற்ற உரிய நிறை, வடிவான மெல்லிய உதரத்தினைப் பேணிக் கொள்ளுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டிய விதம் போன்றவை தொடர்பாக அவசியமான தகவல்கள் பெற்றுக் கொடுக்கப்படும். அவ்வாறே போசனண தொடர்பான ஆலோனைகளும் தமக்கு ஏற்புடைய உடற்பயிற்சிகளை இனங் காண்பதற்கு அவசியமான வழிகாட்டல்கள் என்பன எவ்விதமான அறவீடுகளும் இன்றி இலவசமாக வழங்கப்படுகின்றன.

 

இவ் புதிதாக தாபிக்கப்பட்ட உடற்தகவுநிலை ​ஆலோசனை அலகின் திறந்துவைத்தலுடன்  தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனமானது அதன் சேவைளை மாநாடுகள், பயிற்சிப்பட்டறைகள் மற்றும் உடற்தகவுநிலை முகாம்கள் என்பனவற்றினை அரசு மற்றும் தனியார் துறைசார்ந்த நிறுவனங்களுக்கு நாடுமுழுவதும் வழங்குவதற்கு விரும்புகின்றது. இந் நிகழ்ச்சித்திட்டத்தினால் எதிர்பார்க்கப்படுவது யாதெனில் உடற்தகவுநிலையினை மேம்படுத்துவதுடன் அதற்குச் சமமான முக்கியத்துவத்தினை சுகாதாரம் மிகுந்த உணவுவேளைகளுக்கு மற்றும் ஆரோக்கியமான உளச் சுகாதாரத்திற்கு பெற்றுக் கொடுத்தலினை உறுதிசெய்த வண்ணம் இலங்கையின் பனியணியினரின் வேளையாற்றும் கொள்ளளவினை அபிவிருத்தி அடையச்செய்வதாகும்

 

 
 
தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் உடற்தகவுநிலை ஆலோசனை அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட உடற்தகவுநிலை பயிற்சிப் பட்டறையொன்று 2013 ஜூலை 08 ஆம் திகதி நுவரெலியா மாவட்டச் செயலக வளாகத்தில் நடாத்தப்பட்ட.து. நுவரெலியா மாவட்டச் செயலாளர் அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற விழாவின் பயிற்சிப்பட்டறையில் ஏறத்தாழ 60 அரசாங்க உத்தியோகத்தர்கள் மட்டில் பங்குபற்றினர். மேற்படி உத்தியோகத்தர்களுக்கு இடம்பெற்ற காற்றுச்சுவாச அப்பியாச பயிற்சிப்பட்டறையின் போது உடலின் கொழுப்புச் சதவீத்த்தனைப் பெற்றுக்கொள்ளுவதற்கு​த் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் நீர் மற்றும் தசைச் சதவீதம் என்பனவற்றினைக் கணிப்பதற்கும், உடற்திணிவுச் சுட்டியினைப் பெற்றுக்கொள்ளுவதற்கும்​, உயரத்திற்கு ஏற்ற உரிய நிறை தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொடுப்பதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உளநலம் மற்றும் போசனண ஆகியவற்றிற்கான விரிவரைகளும் இதன்போது நடாத்தப்பட்டன. வாராந்தம் தேகப்பியாச நிகழ்ச்சித் திட்டங்கள் எதிர்காலத்தில் நடாத்தப்பட வேண்டியதன் அவசியம் தீவிரமான கவனத்திற்கு உள்ளானது.
 
 
 

Copyright © 2012 NISS. All Rights Reserved. Site by Sri Lanka Telecom (Services).