தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தினை விளையாட்டுக் கல்வி மற்றும் விளையாட்டுடன் இணைந்த செயற்பாடுகள் தொடர்பாக உயர் விளைநிலமாக்குதலின் பொருட்டு தேவையாய் அமையும் வசதிகள் மற்றும் அனுசரனைச் சூழல் என்பன எம்மால் வழங்கப்பட்டுள்ளன.
விளையாட்டு நூலகம்
விளையாட்டு நூலகமானது விளையாட்டுத் துறையைச் சார்ந்த தொழில் ரீதியினர், பங்குபற்றுநர்கள் மற்றும் அது தொடர்பாக ஆர்வத்தினைக் காட்டும் பிரிவினருக்கு அவசியமான கோட்பாட்டு ரீதியிலான மற்றும் தொழில்நுட்ப அறிவினை உயர்த்துவனை முதன்மையாகக் கொண்டு 1980 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது. விளையாட்டு விஞ்ஞானம் மற்றும் அதற்கு ஏற்புடைய ஏனைய விடயங்களான மருத்துவ விஞ்ஞானம், சமூகவியல், உளவியல் மற்றும் முகாமைத்துவ நூல்களுமாக எம்மிடம் பெறுமதி மிக்கதான 7500 இற்கு மேற்பட்ட நூல்கள் காணப்படுகின்றன. விளையாட்டுக்கள் மற்றும் போட்டிகளுடன் தொடர்புடைய 40 இற்கு மேற்பட்ட தொழில்நுட்ப சஞ்சிகைகள் பங்களிப்பினை நல்குகின்றது. இவ் விளையாட்டு நூலகமானது 1994 ஆம் ஆண்டு ஆசிய பிராந்தியத்தில் காணப்படும் 7 ஆவது சிறந்த விளையாட்டு நூலகமாக சர்வதேச விளையாட்டு மற்றும் தகவல் மத்திய நிலையத்தின் பெயர் தரவு வரிசையில் இனங் காணப்பட்டுள்ளது. இது இலங்கையில் உள்ள ஒரேயொரு விளையாட்டு ஆய்வு நூலகமும் ஆகும். மேற்படி நூலகமானது இலஙகையின் தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் மத்திய நிலையத்தினால் 2009 ஆம் ஆண்டில் தரம் ஒன்று திணைக்கள நூலக அந்தஸ்தினைப் பெற்றுக் கொண்டது.
பிரதான சேவைகள்
சஞ்சிகைகள் | விளையாட்டு நூதனசாலை | ஆய்வுகள் | இறுவட்டுச் சேவைகள்.
அங்கத்துவம் மற்றும் பதிவுகள்
ஆய்வு நடவடிக்கைகளுக்காக எந்தவொரு நபரும் விளையாட்டு நூலகத்தினை இலவசமாக பயன்படுத்த முடியும். அங்கத்துவத்தனைப் பெற்றுக்கொள்ள வேண்டியமையானது புத்தகங்ளையும் மற்றும் ஏனைய பொருட்களையும் இரவல் வாங்குவதற்காக மட்டுமே தேவைப்படுகின்றது. அங்கத்தவர்கள் 7 நாட்கள் காலப்பகுதிக்கு ஒரு தடவையில் நூல் ஒன்றினையும் மற்றும் சஞ்சிகை ஒன்றினையும் ( புதிய வெளியீடு அல்லாத ) இரவல் வாங்க முடியும்.
உறுப்பினர் கட்டணம்
அங்கத்துவம்
அங்கத்துவக் கட்டணம் ( வருடம் ஒன்றிற்கு )
அங்கத்துவத்துவம் புதுப்பித்தற் கட்டணம்
தற்காலிக / மாணவ அங்கத்துவம்
ரூ. 450/-
ரூ. 150/
பொதுவான அங்கத்துவம்
ரூ.1150/-
ரூ. 150/
விஷேட அங்கத்துவம்
ரூ.150/-
ரூ. 50/
Complementary Membership
இலவசம்
இலவசம்
திறந்திருக்கும் நேரங்கள்
நூலகமானது சனி / ஞாயிறு மற்றும் பொது விடுமுறைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் மு.ப. 8.00 மணியிலிருந்து பி.ப. 4.30 வரை திறந்து காணப்படும்.